படம் இல்லை, சிலை இல்லை, அடையாள சின்னம் இல்லை, முஸ்லிம்கள் எதை வணங்குகிறார்கள்?
மலர்கள் இல்லை, ஊதுவர்த்தி இல்லை, வாசனைகட்டை புகை இல்லை, முஸ்லிம்கள் வணக்கத்திற்கு எதை பயன்படுத்துகிறார்கள் ?
இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் நடுவர் இல்லை,
அர்ச்சகர்கள் இல்லை, முஸ்லிம்களின் வணக்கத்திற்கு யார் வழிகாட்டி?
புனித தண்ணீர் இல்லை, மயில் இறகு இல்லை, முஸ்லிம்கள் எதைக்கொண்டு ஆசிர்வதிக்க படுகிறார்கள்?
பள்ளிவாசல்களில் நாற்காலிகள் இல்லை முஸ்லிம்கள் எவ்வாறு வணங்குகிறார்கள்?
அரபு மொழி பேசாதவர்கள் ஏன் அரபு மொழியில் வணங்குகிறார்கள்?
இடம் பெரிது, ஏன் சிலர் மட்டுமே பள்ளிவாசல்களில் வணங்குகிறார்கள்?
இறைவன் ஒருவன்
இதுதான் முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கை.
அவன் உருவமற்றவன்.
மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டவன்.
அவனுக்கு மனைவிகள், பிள்ளைகள், துணைவர்கள் இல்லை, அவன் யாராலும் பெறப்படவும்இல்லை.
எல்லாமே அவனால் படைக்கப்பட்டது.
ஆயுள் காலங்களை நிர்ணயிப்பதும் அவனே.
காலங்கள் முட்ன்டதும் அவனிடமே மீண்டும் திரும்பிவிடும்.
படைப்பது அவனுக்கு எளிது. அவன் "ஆகுக" என்றால் போடும், அது உடே ஆகிவிடும், உயிர் பெற்றுவிடும்.
சுற்று சூழலை பாதுகாக்கும், படையல் இல்லாத வணக்கம்
இஸ்லமிய வணக்கம் எளிமையானது, சுத்தமானது.
வாசனை கட்டைகளை எரிப்பதில்லை, இறைவனுக்கு படையல் செய்வதில்லை.
இறைவன் தேவையற்றவன், எல்லாமே அவனுடையது.
நடுவர் இல்லாத இறைவணக்கம்
முன் நின்று தொழுகை நடதுபரை "இமாம்" என்று சொல்ல்லுவார்.
இஸ்லாத்தைப்பற்றி நல்ல அறிவும், புனித குர்ஆணை முறையாக ஓதும் ஆற்றலும், வெள்ளிக்கிழமை பகல் தொழுகையில் நல்ல பிரசங்கம் செய்யும் ஆற்றலும் உள்ளவரை பள்ளிவாசலுக்கு இமாமாக நியமிக்கபடுவார்.
இவர்- இமாம் இறைவனுக்கும், மனிதனுக்கும் இடையிலுள்ள நடுவர் அல்ல .
முஸ்லிம்கள் தேவைகளை இறைவனிடம் நேரிடையாகவே கேட்க வேண்டும் .
எளிமையான வணக்கம்
இஸ்லாமிய வணக்கத்தில் புனித தண்ணீர் தேளிப்பதோ மயில் இறகுகளை தடவுவதோ கிடையது.
புனித குர்ஆனில் விளக்கப்பட நேர் வழியை பின்பற்றுவது முஸ்லிம்களுக்கு கடமையாகும்.
தொழுகை இடத்தில் எல்லோரும் சமம். ஏழை, பணக்காரர், கருப்பர், வெள்ளையர் அனைவரும் இறைவனிடத்தில் சமம். அனைவரும் ஒரே விசையில் நிற்பார்.
எளிமையான இஸ்லாமிய தொழுகைக்கு நாற்காலி மேசை தேவையில்லை.
நிர்ப்பது, குனிவது, உட்காருவது, நெற்றியை தரையில் வைப்பது இவிகள் தான் தொழுகையில் உடலால் செய்யப்படுவது.
எங்கும் ஒரே மொழியில் தொழுகை
குர் ஆணின் மொழி அரபி மொழி. அதன் சொற்க்களை உச்சரித்து தொழுவார்கள்.
அதனால் ஒரு முஸ்லீம் உலகில் எந்த பள்ளிவாசலிலும் தொழலாம்.
தொழுகையில் ஓதப்படும் அரபு சொற்களின் அர்த்தமரிந்து தொழவேண்டும்.
150-க்கு மேற்பட்ட மொழிகளில் குர்'ஆண் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டு இருக்கின்றன.
தொழுகஐ முடிந்தும் தனது தனிப்பட்ட வேண்டுதலை இறைவனிடம் எந்த மொழியிலும் கேட்கலாம்.
மக்காவிலுள்ள காபாவை நோக்கி எந்த சுத்தமான இடத்திலும் தொழலாம்.
பள்ளிவாசலுக்கு அருகே வசிப்பவர்கள் அந்த பள்ளிவாசலில் தொழுவார்கள். பெரிய கூட்டம் இருக்காது.
வெள்ளிக்கிழமை பகல் தொழுகையை தனிமையாக தோழா கூடாது.
அவ்வேளையில் பள்ளிவாசல்களில் கூட்டம் நிறைந்து இருக்கும்.
ஒரு முஸ்லிமின் முழு வாழ்க்கையும் இறை வணக்கமாக இருக்க வேண்டும்.
உண்மை பேச வேண்டும்
வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்
ஹராமானவைகளை (தடுக்கப்பட்டவற்றை) உண்ணவோ பருகவோ கூடாது
அநீதியை எதிர்த்து போராட வேண்டும்
குறிப்பிட்ட நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுதல் வேண்டும்.
No comments:
Post a Comment